Monday, October 27, 2025 12:28 pm
உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள கீரி சம்பா அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, 3500 மெட்ரிக் தொன் பொன்னி சம்பா அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைவாக, அதன் முதல் தொகுதி கடந்த 23 ஆம் திகதி நாட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகின்றது.
உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள கீரி சம்பா அரிசி பற்றாக்குறையினை தீர்ப்பதற்காக, GR 11 பொன்னி சம்பா அரிசியை கடந்த 15 ஆம் திகதி முதல் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
அதன்படி, இறக்குமதியாளர்களுக்கு இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமங்களைப் பெறுவதற்கான தேவையிலிருந்து விலக்கு அளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒரு இறக்குமதியாளருக்கு அதிகபட்சமாக 520 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
நாட்டில் மதிப்பிடப்பட்ட ஆண்டு அரிசியின் நுகர்வு சுமார் 2.4 மில்லியன் மெட்ரிக் தொன்னாகவும், இதில் கீரி சம்பாவின் ஆண்டு நுகர்வு 10 சதவீதமாகவும் காணப்படுகின்றது. அதாவது, சுமார் 200,000 மெட்ரிக் தொன் ஆகும்.

