Sunday, October 26, 2025 7:02 pm
இந்தியாவின் குறிப்பாக தமிழ் நாட்டின் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிப்பேரரசு என்று உலகத் தமிழர்களினால் அழைக்கப்படும் கவிஞர் வைரமுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ் பலாலி விமான நிலையத்தின் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் தயாரிப்பான “மில்லர்” முழு நீளத் திரைப்படத்தை ஆரம்பித்து வைப்பதற்காக கவிப்பேரரசு வைரமுத்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தமை தொடர்பாக, வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட கவிப்பேரரசு வைரமுத்து, “யாழ்ப்பாணம் என்றால் பரவசமும், துயரமும் கலந்து கலந்து வருகின்றது” என்று உணர்வுடன் நயவுரை செய்தார்.
அத்துடன் யாழ் மண்ணின் பெருமைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

