Saturday, October 25, 2025 1:00 pm
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த திரைப்படம் இரு வயதான கேங்ஸ்டர் கதாப்பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.
ஆனால், ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருக்கும் திரைப்படத்தை இயக்குவது லோகேஷ் கனகராஜ் அல்ல, நெல்சன் என புதிய தகவல் கிடைத்துள்ளது.
லோகேஷ் கனகராஜின் கதை வன்முறை நிறைந்து இருப்பதால் ரஜினிகாந் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றும், நெல்சன் கூறிய கதைக்கு அவர் நடிக்க தயாராக இருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, ரஜினிகாந்த் சுந்தர்.சி இயக்கும் திரைப்படத்திலும், கமல்ஹாசன், அன்பறிவ் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

