Saturday, October 25, 2025 11:35 am
தாய்லாந்து மன்னர் வஜிரலோங்கோர்னின் தாயார் ராணி சிரிகிட் தனது 93 ஆவது வயதில் காலமானார்.
2019ஆம் ஆண்டு முதல் பல்வேறு நோய்களால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ரத்தப்போக்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ராணி சிரிகிட், நேற்று வெள்ளிக்கிழமை பேங்கொக்கில் உள்ள வைத்தியசாலையில் உயிரிழந்ததாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2016ஆம் ஆண்டு காலமான தாய்லாந்தின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த பூமிபோல் அதுல்யாதேஜ் மன்னரின் மனைவி இவராவார்.

