Saturday, October 25, 2025 11:25 am
இன்றும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், மேற்கு, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 40-50 km வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

