Saturday, October 25, 2025 10:38 am
யாழ்ப்பாணம், கொக்குவில் இந்து கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த மக்கள் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டதன் 38 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரி வெளி வாசலில் இடம்பெற்றது. இந்திய இராணுவத்தினரால் இதன் போது, பாடசாலையில் தஞ்சமடைந்த 50 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
கொக்குவில் படுகொலை நினைவேந்தல் குழு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், பொதுசுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
1987 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம், 22ஆம், 23ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை கொக்குவில் பிரம்படி, கோண்டாவில், கொக்குவில் இந்து கல்லூரி வளாகம் ஆகிய இடங்களில் இந்திய இராணுவம் பொதுமக்களை படுகொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


