Friday, October 24, 2025 11:33 am
வடகிழக்கு பிரான்சில் உள்ள அருங்காட்சியகத்திலிருந்து 90,000 யூரோக்கள் (30 மில்லியன் ரூபாய்) மதிப்புள்ள சுமார் 2,000 தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் திருடப்பட்டுள்ளன.
பாரீஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்திலிருந்து அண்மைய தினங்களில் நெப்போலிய மன்னனின் வைர நகைகள் திருடப்பட்டிருந்தன. இந்நிலையில் மதிப்புமிக்க நகைகள் திருடப்பட்டதைத் தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருடப்பட்ட நாணயங்கள் 1790 மற்றும் 1840க்கு இடைப்பட்ட காலத்திற்குரியவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

