Thursday, October 23, 2025 2:03 pm
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியினைச் சேர்ந்த மீனவர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (23.10.2025) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
44வயதினையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜோசப் துரைராசா அன்ரனி ஜோசப் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறியமுடிகிறது.
குறித்த மீனவர் இன்றையதினம் அதிகாலையில் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்றவேளை கடலில் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகவே இந்த உயிரிழப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சடலமானது பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.