Thursday, October 23, 2025 5:48 am
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதான தீவுப் பிரதேசங்களுக்குச் செல்லும் குறிகாட்டுவான் இறங்குதுறையை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு நேற்று புதன்கிழமை இடமபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, நயினாதீவு நெடுந்தீவு ஆகிய இரண்டு தீவுகளுக்கும் யாழ் நகரப் பகுதியையும் இணைக்கும் பாதையளாக குறிகாட்டுவான் இறங்குதுறை பொது மக்களினால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அந்த இறங்குதுறை இதுவரை காலமும் புனரமைக்கப்படவில்லை.
அத்துடன் நயினாதீவில் சைவ – பௌத்த கோவில் இருப்பதாகவும் அங்கு பெருமளவு பக்த்தர்கள் சென்று வருவதால் அவர்களின் பாதுகாப்பு கருதி இதனை அபிவி்த்தி செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிகாட்டுவான் இறங்குதுறை ஊடாக பயணம் செய்கின்ற பயணிகள் மாத்திரமல்ல, அந்தப் பிரதேச மக்களின் உணவுகள் வேறு பொருட்கள் அனைத்தும் ஏற்றிச் செல்லப்படுகின்றன. ஆகவே அதனை மேலும் பாதுகாப்பாகவும் துரிதமாக சென்றுவரக் கூடிய முறையிலும் புனரமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.