Wednesday, October 22, 2025 1:46 am
அனர்த்த நிலைமைக்கு மத்தியில் அனர்த்த முகாமைத்துவக் குழு மூலம் வழங்கப்பட வேண்டிய சேவைகளை அவசரமாக முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்டத்தில் நில்வல அணைக்கட்டு பிரச்சினை காரணமாக அதிக அளவிலான விவசாய வயல் நிலங்கள் சேதமடையும் அபாயம் உள்ளன.
இந்த அனர்த்த நிலையால் 3 மனித உயிர்கள் பலியாகியுள்ளன. கடந்த காலங்களில் ரெட் ஸ்டார் படை போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்தத் திட்டங்களுக்கு மேலதிகமாக அரசாங்கத்தாலும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுங்கள்.
எதிர்காலத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் அனர்த்த நிலைமைக்கு மத்தியில் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை உடனடியாக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.