Tuesday, October 21, 2025 8:25 am
மேஷம்
தம்பதிகளிடையே புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி கூடும். தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வேற்றுமதத்தவர் உதவுவார். செலவு கூடும். சிக்கனம் தேவை. வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். தேக ஆரோக்கியம் சிறக்கும்.
ரிஷபம்
நண்பர்களின் ஆலோசனை பயனளிக்கும்.பழைய வீட்டை சீர் செய்வீர்கள். கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட விடயங்கள் தாமதமாகும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பிள்ளைகள் உற்சாகமடைவர்.
மிதுனம்
உத்தியோகத்தர்களுக்கு முன்பை விட சலுகைகள் அதிகரிக்கும். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவார். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டுக்கொடுப்பது நல்லது. வெளியிடங்களுக்குச் சென்று வருவார். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு இடுப்பு, கை, கால் வலி நீங்கும்.
கடகம்
பணப்பற்றாக்குறை நீங்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள்.உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
சிம்மம்
வியாபாரம் செழிக்கும். தம்பதிகளின் அன்யோன்யம் பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். தம்பதிகளின் அன்பு மேலோங்கும். உத்தியோகத்தில் மதிப்பு கூடும்.
கன்னி
பணியாளர்களுக்கு, வேலைப்பளு இருக்கும். வியாபாரத்தில் சூழ்ச்சியை வெல்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவுவர். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பணவரவு நன்றாக இருக்கும். இரு சக்கர வாகனம் ஓட்டும் போது வேகத்தை குறைப்பது நல்லது. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.
துலாம்
வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும். பணப் பிரச்சினை இருக்காது.
விருச்சிகம்
அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும். உத்தியோகத்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயரைப் பெறுவர். குடும்பத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் மிகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மணமாகாதவர்களுக்கு எதிர்பார்த்தவாறு துணை தேடி வரும்.
தனுசு
உத்தியோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தங்கள் காதலை வெளிப்படுத்த ஏற்ற காலம். முகத் தோற்றம் பளிச்சிடும். அதிக விற்பனைக்காக வியாபாரத்தை தொடங்க புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.
மகரம்
பணவரவுகளில் குறைவில்லை. பிள்ளைகள் சுபீட்சம் காண்பர். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். பணப் பிரச்சினை இருக்காது.
மீனம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியத்தடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.