Tuesday, October 21, 2025 6:32 am
1987ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றன.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் யாழ்.வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி உள்ளிட்ட வைத்தியசாலை சமூகத்தினர் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நோயாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
1987ஆம் ஆண்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்திய அமைதிப்படையினரின் தாக்குதலில் வைத்தியசாலை பணியாளர்கள் 21 பேர் உள்ளிட்ட 68 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
