Tuesday, October 21, 2025 5:23 am
காலி, ஹிக்கடுவை, மஹவத்த பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவரால் சுமார் 4 முதல் 5 தடவைகள் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன் போது வீட்டின் சுவர் மற்றும் ஜன்னல் சேதமடைந்துள்ளதாகவும் எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சும்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.