பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதலை பயன்படுத்தி இந்தியா தமது பிராந்தியத்தில் சாதகமான நிலைமையை தோற்றுவிக்க முயற்படும் நிலையில், சீன – சவூதி அரேபிய நாடுகள் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif)ஆசிப், அல்-ஜசீரா (aljazeera) தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளும் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றும் விரைவில் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இரண்டு நாடுகளின் எல்லை மோதல்களை சாதகமாக்கி இந்தியா பிராந்தியத்தில் தமக்கு ஏற்ற புவிசார் அரசியல் சூழலை உருவாக்குவதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் விமர்சித்து வந்த நிலையில், அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணல் வழங்கிய, அமைச்சர் கவாஜா ஆசிப், ஆப்கானிஸ்தானில் உள்ள சில தீவிரவாதக் குழுக்களை ஒழிக்க வேண்டும் எனவும், தீவிரவாத செயற்பாடுகள் பிராந்தியத்தில் அமைதியை தராது எனவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் சீனாவும் சவூதி அரேபியாவும் சமதான முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றும், தீவிரவாதத்தை கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தான் அரசுடன் சவூதி அரேபிய பேசியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்தார்.
அதேவேளை, கட்டார் வெளியுறவு அமைச்சு நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்பிரகாரம். கட்டார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்தின் கீழ் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் பாகிஸ்தான் ருடே (pakistantoday) என்ற ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்தினார், மேலும் இரு தரப்பினரும் இந்த மாதம் 25 ஆம் திகதி இஸ்தான்புல்லில் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியதாக பாகிஸ்தான் ருடே மேலும் தெரிவித்துள்ளது.