நாட்டின் பெரும்பாலான பகுதிகள் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அதன்படி வடக்கு, வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.
பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கின்றது.
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ் நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.