பாரிஸில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் மன்னரான நெப்போலியன் பயன்படுத்திய 9 வைர நகைகள் பாரிசில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
அருங்காட்சியகத்தில் வழக்கம்போன்று சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் பொருட்களை பார்த்துகொண்டிருந்த போது உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் நெப்போலியனின் 9 வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என பிரான்ஸ் கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டள்ளனர். இதனால் அருங்காட்சியகம் தற்போது மூடப்பட்டுள்ளது.
232 ஆண்டுகள் பழமையான இந்த அருங்காட்சியகத்தில் 16 ஆம் நூற்றாண்டில் லியோனார்டோ டா வின்சி வரைந்த புகழ்பெற்ற மோனாலிசா ஓவியம் உட்பட பல உலகப் புகழ்பெற்ற பழங்கால கலைப்பொருட்கள் உள்ளன.