கொழும்பு மாநகரத்திலும், அதனை சூழவுள்ள பகுதிகளிலும் இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை வரை அவசர பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநாகர சபை இந்த இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. இந்த நாட்களில் கடும் மழை பெய்யும் என்றும், பாரிய மின்னல் தாக்கம் ஏற்படும் எனவும், மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, மீட்புப் பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு மக்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் மாநகர சபை தெரிவித்துள்ளது.
011-2422222 மற்றும் 011-2686087 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொள்ளுமாறு கொழும்பு வாழ் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கடுமையான காற்றும், இடி மின்னுடன் தொடர் மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.