பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலிக்கு இன்று 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிறந்தநாள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பாகுபலி படக்குழுவினர் ஒரு BTS வீடியோவை பகிர்ந்துள்ளனர்.
அதில் பாகுபலி படப்பிடிப்பு தளத்தில் ராஜமௌலி நடிகர்களுக்கு காட்சிகளை நடித்து காண்பிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.அவருடைய நடிப்பை நடிகர்கள் தத்ரூபமாக உள்வாங்கி நடித்ததுதான் நாம் திரையில் பார்த்து வியந்த காட்சிகள்.
2015 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி உலகையே திரும்பி பார்க்க வைத்தது. இது தெலுங்கிலும், தமிழிலும் நேரடியாக வெளியான நிலையில் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
250 கோடி மதிப்பீட்டில் உருவான முதல் பாகத்தை தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டு அடுத்த பாகம் வெளியானது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகுபலி உரிமைக்கான 10வது ஆண்டு நிறைவை குறிக்கும் விதமாக, ஒட்டுமொத்தக் கதையையும் ஒரே நேரத்தில் ரசிக்க உதவும் இந்த புதிய ‘தி எபிக்’ பதிப்பை ராஜமௌலி, அறிவித்தார்.இந்த பதிப்பில், பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் இணைக்கப்பட்டு ஒரே பதிப்பாக வெளியாகவுள்ளது.
பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி , தமன்னா ஆகியோர் நடித்த இந்த புதிய பதிப்பு வரும் அக்டோபர் 31 ஆம் திகதி IMAX வடிவத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
முதல் இரண்டு பாகங்களும் உலக அளவில் மாபெரும் வெற்றியைப் பெற்ற நிலையில், ‘பாகுபலி: தி எபிக்’ மீதான எதிர்பார்ப்பை BTS வீடியோ இரட்டிப்பாக்கியுள்ளது.