சாக்ரமெண்டோவில் மருத்துவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக கலிபோர்னியா நகரின் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள், நெடுஞ்சாலை 50 இன் கிழக்கு நோக்கிய பாதையில் ஒரு மருத்துவ ஹெலிகாப்டர் தலைகீழாகக் கிடப்பதைக் காட்டுகின்றன.
ஹெலிகாப்டர் ஒரு நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் திரும்பிக் கொண்டிருந்தபோது, உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த நேரத்தில் விமானத்தில் ஒரு விமானி, செவிலிய, துணை மருத்துவர் இருந்ததாகவும், அவர்கள் “மோசமான நிலையில்” உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் குழுவில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் இருந்ததாகவும் சாக்ரமெண்டோ தீயணைப்புத் துறையைச் சேர்ந்த கப்டன் ஜஸ்டின் சில்வியா கூறினார்.