வடக்கு பிலிப்பைன்ஸில் உள்ள ககாயன் மாகாணத்தில் திங்களன்று இடிந்து விழுந்த பாலத்தை முழுமையாக மதிப்பிடுவதற்காக பிலிப்பைன்ஸின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஒரு குழுவை அனுப்பியுள்ளது.
பாலத்தின் 18 தொன் கொள்ளளவை விட மிக அதிகமாக, தலா 50 தொன் நிறை கொண்ட மூன்று ஏற்றப்பட்ட லொறிகள் , கட்டமைப்பு இடிந்து விழுந்தபோது அல்கலா நகரில் உள்ள பாலத்தில் இருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
“மதிப்பீட்டின் முடிவுகளின் அடிப்படையில் துறை ஒரு பரிந்துரையை வழங்கும்” என்று திங்கள்கிழமை மாலை வெளியிடப்பட்ட அறிக்கையில் பொதுப்பணி செயலாளர் வின்ஸ் டிசன் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டன.