யாழ் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பகட்ட பணியின் போது துப்பாக்கி ரவைகள் கடந்த சனிக்கிழமை (20) கண்டுபிடிக்கப்பட்டன.
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் நேற்று முன்தினம் (20) T56 ரக துப்பாக்கி ரவைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பான தகவல்கள் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு வழங்கப்பட்டதையடுத்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நேற்று (21) துப்பாக்கி ரவைகளை மீட்டெடுப்பதற்கான அனுமதி கோரப்பட்டது. ஊர்காவற்துறை நீதிமன்ற உத்தரவிற்கமைய இன்று காலை (22) துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.