தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாதாந்தம் வெளியீடு செய்யப்டும் ஆன்மீகளின் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில்
வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆவணி மாத 332 ஆவது இதழின் வெளியீட்டு நிகழ்வில் வெளியீட்டுரையினை சைவப்புலவர் பொன். சந்திரவேலும், மதிப்பீட்டுரையினை இளைப்பாறிய அதிபர் இரா.ஶ்ரீநடராசாவும் நிகழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
ஜெயந்திநகர், கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள மகாதேவ ஆச்சிரமத்தின் கோரிக்கைக்கு அமைவாக,
வடிவேல் சுவாமிகளின் சமாதிக் கோயில் புனருத்தாரனப் பணிக்காக 200,000 ரூபா நிதி வழங்கிவைக்கப்பட்டதுடன்
அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக,
நவராத்திரி தின பரிசளிப்பு நிகழ்வுக்காக 20,000 ரூபா நிதியும், பிரமந்தனாறு, விசுவமடு பகுதியை சேர்ந்த பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவனின் சிரார்த்த தினத்துக்காக (அந்தியேட்டி கிரியை) 50,000 ரூபா நிதி வழங்கப்பட்டன.