இந்த ஆண்டின் தொடக்கத்தில் தலிபான்களால் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட ஒரு வயதான பிரிட்டிஷ் தம்பதியினர் தங்கள் மகளுடன் மீண்டும் இணைந்துள்ளனர்.
76 வயதான பார்பி ரெனால்ட்ஸ் ,அவரது கணவர் பீட்டர், 80, ஆகியோர் பிப்ரவரி 1 ஆம் திகதி மத்திய ஆப்கானிஸ்தானின் பாமியன் மாகாணத்தில் உள்ள தங்கள் வீட்டிற்குச் சென்றபோது தலிபானின் உள்துறை அமைச்சால் தடுத்து வைக்கப்பட்டனர்.
மார்ச் மாதத்தில், அவர்கள் காபூலில் உள்ள அதிகபட்ச பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்பட்டனர், அங்கு அவர்கள் குற்றச்சாட்டு இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.பேச்சுவார்த்தைகளின் இறுதிக் கட்டங்களில் அவர்கள் காபூலின் மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.
கட்டார் தலைமையிலான மத்தியஸ்தத்தைத் தொடர்ந்து அவர்கள் வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டு டோஹாவுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
