ஒரு சில மீனவர்கள் சட்டவிரோதமான சுருக்குவலையைப் பாவித்து மீனவர்கள் மீன் பிடிப்பதால் வடமராட்சி கிழக்கில் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக வடமராட்சி வடக்கு மீனவர் பிரதிநிதிகள் வடமராட்சி வடக்கு பிரதேச சபையில் நடை பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
சட்ட விரோத சுருக்கு வலையில் சிறிய மீன்கள் அகப்படுகின்றன. இறந்த மீன்களை கடலில் வீசுகிறார்கள். இதனால் மறைய மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கடற்படை, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார்கள். அதற்கு பதிலளித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரி இவ்வருடமும் அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.