Thursday, September 18, 2025 6:38 am
பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக சத்ததுடன் வேகமாக சென்ற மோட்டர் சைக்கிள்களுக்கு எதிராக வவுனியா போக்குவரத்து பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
வவுனியா வைரவபுளியங்குளம் பகுதி, பூங்கா வீதி என்பவற்றில் அதிக சத்தத்துடன் வேகமாக மோட்டர் சைக்கிள்கள்கள் சிலவற்றை இளைஞர்கள் செலுத்தி வருவதுடன், அப் பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடுவோர், அப் பகுதியில் வசிப்போர், மாணவர்கள் என்போருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தி வந்தனர். அத்துடன் விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.
வுனியா மாநகர சபையின் துணை மேயர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பொலிஸாரின் கவனத்துக்கு இஅ சம்பவத்தைக் கொண்டு செல்லப்பட்டத்தையடுத்து பூங்கா வீதி, வைரவபுளியங்குளம் ஆகிய பகுதிகளில் கடமையில் ஈடுபட்ட போக்குவரத்து அதிக சத்தத்துடன் சென்ற மோட்டர் சைக்கிள்களைச் செலுத்தியவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மோட்டர் சைக்கிள்களையும் கைப்பற்றினர்.

