நேபாளத்தில் நடைபெற்ற போராட்டத்தால் மூடப்பட்ட காத்மண்ட் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் 24 மனித்தியாலயத்தின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிபுவன் சர்வதேச விமான நிலைய பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தின் போது விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களைத் தொடர்பு விபரங்களை பெற்றுக் கொள்ளுமாறும், விமான நிலையத்திற்குச் செல்லும்போது அவர்களின் அதிகாரப்பூர்வ டிக்கெட்டுகள், அடையாள அட்டையை எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.