நாட்டிற்குள் இனிமேல் போர் அபாயம் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடி துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் இன்று (1) கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இந்தவிடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன் கீழ், வடக்கு மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்தினருக்கும், கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் இருந்து வரும் மீன்பிடி படகுகளுக்கும் நீர், மின்சாரம், எரிபொருள், குளிர்பதன சேமிப்பு வசதிகள், வலை பதப்படுத்தும் மைய வசதிகள், ஏலம் விடுவதற்கான மண்டப வசதிகள் மற்றும் வானொலி தொடர்பு மைய வசதிகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக இந்த ஆண்டு 298 மில்லியன் ரூபாயினை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
நாட்டில் பிளவுபட்ட மக்களை ஒன்றிணைப்பதில் வடக்கு மக்கள் ஒரு தீர்க்கமான காரணியாக கடந்த பொதுத் தேர்தலில் இருந்ததாகவும், எதிர்காலத்தில் இந்த ஒற்றுமை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.