Monday, August 25, 2025 10:13 am
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதிகள் இன்று (25) எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்கள் இவ்வாறு சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹஷிம் மற்றும் பழனி திகாம்பரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ருவான் விஜேவர்தன, காவிந்த ஜயவர்தன, நிமல் சிறிபால டி சில்வா, ஜி.எல். பீரிஸ் மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

