காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை எதிர்த்து இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, குறித்த போராட்டத்தில் “எங்கள் ஆன்மாவையும் இரத்தத்தையும் கொண்டு காஸாவை காப்பாற்றுவோம்” என மக்கள் கோஷமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சட்டவிரோதமான கருத்துக்களை தெரிவித்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.