அமெரிக்க ஓபனின் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் இத்தாலிய வீரர்களான சாரா எர்ரானி மற்றும் ஆண்ட்ரியா வவாசோரி ஆகியோர் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டனர்.
நியூயோர்க்கின் ஆர்தர் ஆஷ் அரங்கில் புதன்கிழமை (20) நடைபெற்ற போட்டியில் 6-3, 5-7, 10-6 என்ற கணக்கில் இகா ஸ்வியாடெக் மற்றும் காஸ்பர் ரூட் ஜோடியை வீழ்த்தி இவர்கள் சம்பியன் பட்டம் வென்றனர்.
இத்தாலியர்கள் போட்டியில் ஒரு செட்டை மட்டுமே இழந்தனர்.
கிண்ணத்தை வெற்றி கொண்டமைக்காக $1 மில்லியன் காசோலையையும் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
இது கடந்த ஆண்டு அவர்கள் வென்ற $200,000 (£148,000) ஐ விட ஐந்து மடங்கு அதிகம்.



