2024 நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் , உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
சட்டத் தடைகள் இருந்தபோதிலும், அவற்றைத் தீர்ப்பதில் அரசாங்கம் நம்பிக்கையுடன் உள்ளது. தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் ரத்நாயக்க கூறினார்.