ஈரியகஹலிந்த வீதிப் பகுதியில் கடந்த 12 ஆம் திகதி இரவு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக சீதுவை பொலிஸார் நேற்று (14) 7 சந்தேக நபர்களை கைது செய்தனர்.
தும்மலசூரிய பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்ட இந்தக் குழுவிடமிருந்து மூன்று மன்னா கத்திகளையும் பொலிஸார் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்டவர்கள் சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 17, 18, 21, 25, 27, மற்றும் 44 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இன்று (15) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் 12 அன்று இரவு, ஈரியகஹலிந்த பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதாக சீதுவை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
தாக்குதலில் படுகாயமடைந்த 40 வயது நபர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
சீதுவை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.