சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதி மிக்க நகைகள் ,கைத்தொலைபேசிகள் ஆகிக்யவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ப்லொஸ் கான்ஸ்டலிள் கொஸ்தாபசு ஹரிதாஸ் லைமையிலான ஊர்காவற்றுறை பொலிஸ் அணியினர் நாரந்தனை பகுதியில் ஈடுபட்டிருந்த போது வசந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய ஒருவரை மறித்து சோதனை செய்தனர்,
அவரிடமிருந்து தாலிக்கொடி, சங்கிலி, மோதிரங்கள், பென்ரன்கள், ஆகியவற்றைக் கைப்பற்றினர். விசாரணையின் போது அவை சுன்னாகம் பகுதியில் களவாடப்பட்ட பெறுமதிமிக்க நகைகள் என தெரியவந்தது.
சந்தேக நபரின் வீட்டுக்கு சென்று சோதனைகளை மேற்கொண்டபோது அங்கு பல நவீன கைத்தொலைபேசிகள், ஒருதொகைப் பணம் இலத்திரனியல் சாதனங்கள் உள்ளிட்ட பல பொருட்களையும் கைப்பற்றினர்.