இலங்கை பாராளுமன்ற வளாகத்தின் புதுப்பித்தல் பணிகள் 42 ஆண்டுகளுக்கும் பின்னர் நடைபெற்று வருவதாக பாராளுமன்ற அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை ஒப்புதலின் பேரிலும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் அறிவுறுத்தலின் பேரிலும் இந்தப் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பாராளுமன்ற வளாகத்தின் கொன்கிறீட் கூரை, மொட்டை மாடியில் உள்ள மண் அடுக்கை அகற்றி பழுதுபார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
மேலும் கூரை வடிகால்கள், செப்பு கதவு, பாராளுமன்ற மருத்துவ மையம், கழிப்பறைகள் , உறுப்பினர்களின் உடை மாற்றும் அறை ஆகியவற்றில் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெரிய அளவிலான புதுப்பித்தல் பணிகள் இலங்கை இராணுவத்தின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன.

