நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கும் பொறுப்புள்ள இளைஞர் தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேசிய இளைஞர் மாநாட்டின் ஆரம்ப விழாவில் தெரிவித்துள்ளார்.
தேசிய இளைஞர் மாநாடு இன்று(12) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
தேசிய இளைஞர் மாநாட்டின் ஆரம்ப விழாவில் பேசிய ஜனாதிபதி இளைஞர்களை அரசியல் கைப்பாவைகளாக மாற்றாமல் நாட்டின் எதிர்காலத்தை வழிநடத்தும் தலைவர்களாக உருவாக்குவதே இந்த மாநாட்டின் இலக்காக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அரச சேவையில் துறைசார் நிபுணத்துவம் உள்ளவர்களை உள்ளெடுக்கும் நோக்கில் 62,000 பேரை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்நிகழ்வின் போது தெரிவித்துள்ளார்.