கொலம்பியாவின் ஒரு முக்கிய வலதுசாரி எதிர்க்கட்சி பிரமுகரும், எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி வேட்பாளருமான, 39 வயதே ஆன செனட்டர் மிகுவல் யூரிப் உயிரிழந்தார்.
கடந்த ஜூன் மாதம் துப்பாக்கியால் சுடப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் திங்களன்று (ஓகஸ்ட் 11) உறுதிப்படுத்தியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூன் 7 ஆம் திகதி போகோட்டாவில் நடந்த ஒரு பொது பேரணியின் போது மிகுவல் யூரிப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஜூலை மாதம் 15 வயது சிறுவன் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொலை முயற்சிக்குப் பின்னால் இருந்த மூளையாக செயல்பட்டவர் எல்டர் ஜோஸ் ஆர்டீகா ஹெர்னாண்டஸ் என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.