மெட்டாவுக்கு சொந்தமான பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமுக்கு, சமீப காலமாகவே மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.
இதன்படி இன்ஸ்டாகிராம் (Instagram) உலகின் நான்காவது பெரிய சமூக வலைத்தளமாகத் திகழ்கின்றது வட்ஸ் அப் (WhatsApp), பேஸ்புக் (Facebook), எக்ஸ் (X) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை விட இன்ஸ்டாகிராம் தற்போது அதிக அளவில் பிரபலமாகி வருகின்றது.
இந்தநிலையில், பயனர்களின் வசதிக்காக இன்ஸ்டாகிராம் மற்றுமொரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
இதன்படி இன்ஸ்டாகிராம் நேரடி (LIVE) வசதியை இனி அனைவரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சில விதிமுறைகளை மாற்றியுள்ளது.
இதற்கமைய குறைந்தபட்சம் 1,000 பின்தொடர்பவர்களைக் கொண்ட பொது கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே நேரடி காணொளிகளை (LIVE) வெளியிட முடியும்.