இலங்கையின் முதற்தர T20 தொடரான லங்கா பிரீமியர் லீக்கிற்கான (LPL) திகதிகளை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 23ஆம் திகதிவரை LPL தொடர் நடைபெறும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த பருவகாலத்துக்கான LPL போட்டிகள் கொழும்பு – ஆர்.பிரேமதாஸ, கண்டி – பல்லேகலை மற்றும் தம்புள்ள – ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட LPL தொடர் பணிப்பாளர் சமந்த தொடான்வெல, இம்முறை LPL தொடரானது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக்கிண்ணத்தை கருத்திற்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் LPL தொடரானது ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை இடம்பெறவுள்ள போட்டிகள் ஆறாவது லங்கா பிரீமியர் லீக் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.