ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் தமர களுபோவில நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, நேற்று (29) நியமனக் கடிதத்தை வழங்கியிருந்தார்.
கொழும்பு ரோயல் கல்லூரியில் உயர்கல்வியை நிறைவு செய்த தமர களுபோவில, 1986 ஆம் ஆண்டு கொழும்பு மருத்துவ பீடத்தில் கல்வி கற்றார்.
பின்னர், பாணந்துறை வைத்தியசாலையில் மருத்துவராக தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் தமர களுபோவில இன்று காலை (30) கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளரும் மகப்பேறியல் மற்றும் மகளிர் வைத்திய ஆலோசகருமான வைத்தியர் ஜயங்க திலகரத்ன பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.