மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்டில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய டெஸ்ட் கப்டன் ஷுப்மன் கில் 4சதங்கள் அடித்து கிறிக்கெற் வரலாற்றின் தனது பெயரைப் பதிந்துள்ளார்.
கிறிக்கெற் ஜாம்பவான்களான் பிரட்மன், கவாஸ்கர் ஆகியோரின் சாதனையைச் சமப்படுத்தினார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கப்டனாக முதல் தொடரில் நான்கு சதங்களை அடித்த முதல் கப்டன் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
பிரட்மன், விராட் கோலி , ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தங்கள் கப்டன் அறிமுகத்தொடரில் மூன்று சதங்களை அடித்தனர்.
லீட்ஸில் 147 ஓட்டங்கள், பர்மிங்ஹாமில் முதல் இன்னிங்சில் 269 ஓட்டங்கள், பர்மிங்ஹாமில் இரண்டாவது இன்னிங்சில் 161 ஓட்டங்கள். மான்செஸ்டரில் 103 ஓட்டங்கள் அடித்தார் கில்