ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக திருமதி பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று(28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.
இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியான திருமதி பீ.ஏ.ஜீ பெர்னாண்டோ, இதற்கு முன்னர் மேல் மாகாணக் கல்வி, கலாசார மற்றும் கலை நடவடிக்கைகள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
Trending
- தாய்லாந்தும், கம்போடியாவும் “நிபந்தனையற்ற” போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டன
- மகளிர் கிண்ண உலக செஸ் சம்பியனானார் திவ்யா
- பாங்கொங்கில் உணவுச் சந்தையில் துப்பாக்கிச் சேடு 6 பேர் பலி
- கப்டனாக அறிமுக டெஸ்ட் தொடரில் 4 சதங்கள் சதங்கள் ஷுப்மன் கில் சாதனை
- துல்கர் சல்மான் பிறந்தநாளில் சிறப்பு போஸ்டர் வெளியிட்ட காந்தா படக்குழு
- Govpay செயலி மூலம் அபராதம் செலுத்தும் முறை அமுல்
- ஹொங்கொங் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்
- பெண்களாக மாறி மோசடியில் ஈடுபட்ட 14,000 ஆண்கள்