இணைய உரையாடல்களில் முக்கிய பங்காற்றும் எமோஜிகளை கொண்டாடும் உலக எமோஜி தினம் இன்றாகும்
- 😂 மகிழ்ச்சியின் கண்ணீர் எமோஜி- மிக அதிகமாக சிரிக்கும் போது பயன்படுத்தப்படுகிறது. மீம்கள், சினிமா டயலாக்கள் போன்றவற்றில் பொதுவாக வருகிறது.
- 🤣 தரையில் உருண்டு சிரிக்கும் (ROFL) எமோஜி- கட்டுப்படுத்த முடியாத சிரிப்பு. உண்மையான “ROFL” தருணங்களுக்கு.
3.❤️ சிவப்பு இதய எமோஜி- அன்பு, பாசம் மற்றும் அக்கறையின் உலகளாவிய சின்னம். அனைத்து சமூக தளங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. - 😘 முத்தம் எமோஜி- காதல் மற்றும் நெருக்கமான உறவுகளுக்கு. அன்பான வாழ்த்துகளுக்கு ஏற்றது.
- 😭 சத்தமாக அழும் எமோஜி- உணர்ச்சிப் பெருக்கங்கள், சோக தருணங்கள், அல்லது கிண்டலான “ஓவர் டிராமா”க்கு பயன்படுத்தப்படும் எமோஜி.
6 🥺 கெஞ்சும் முகம் எமோஜி- இனிமையான வேண்டுகோள், மன்னிப்புக் கோரல், அல்லது இரக்கத்தின் வெளிப்பாடுகளுக்கு. - 😅 வியர்வை சிந்தும் சிரிப்பு எமோஜி – “அய்யோ, கடைசி கணத்தில் தப்பிச்சேன்!” போன்ற பதட்டமான நகைச்சுவைக்கான பதில்.
- 💋 முத்தக் குறி எமோஜி – காதல், அர்பணிப்பு அல்லது நெருக்கமான உறவுகளை காட்டும் ஒரு இனிமையான சின்னம்.
9 😊 புன்னகைக்கும் கண்களுடன் ஒளிரும் முகம் – மகிழ்ச்சி, நன்றியுணர்ச்சி அல்லது சந்தோஷமான ஒத்துழைப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.
உலக எமோஜி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 அன்று கொண்டாடப்படுகிறது.
ஏனெனில் 📅 calendar emoji-யில் காணப்படும் திகதி அதுவே.
இந்த நாளை எமோஜிபீடியா நிறுவனர் ஜெர்மி பர்ஜ் நிறுவினார்.
எமோஜிகள் எப்படி உலகளவில் மக்கள் தொடர்பு கொள்ளும் முறைமைக்கு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை நினைவுகூரும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
எமோஜிகள் மொழித் தடைகளை தாண்டுகின்றன. Z-ஜெனரேஷனும், ஆல்பா ஜெனரேஷனும் மீம் கலாச்சாரத்தில் புதிய அர்த்தங்களோடு எமோஜிகளை பயன்படுத்துகின்றனர்.
குறுகிய காலத்தில் அதிக உணர்ச்சியை வெளிப்படுத்தும் திறன் இருப்பதால் எமோஜிக்கள் பரவலான மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
மொழி தெரியாமலேயே உணர்ச்சியை பகிரும் வழி இது. அதன் எளிய பயன்பாட்டின் காரணமாக சமூக ஊடகங்களில் (WhatsApp, Instagram, X, Facebook) அதிக பிரபலத்தை அடைந்துள்ளது.