முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டன.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பின்னர் பிரதிவாதிகளை 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதைத் தொடர்ந்து, இவர்கள் அனைவருக்கும் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டதோடு, அவர்களின் கடவுச்சீட்டுகளைப் பறிமுதல் செய்யவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.
மேலும், பிரதிவாதிகளின் கைவிரல் அடையாளங்களைப் பெற்று அறிக்கை பெறவும் உத்தரவிடப்பட்டது. 97 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாக சம்பாதித்ததற்காக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.
Trending
- நெடுந்தீவில் பிடிபட்ட முதலை வன ஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைப்பு
- மகளிர் உலகக் கிண்ண அரையிறுதிக்கு நான்கு அணிகள் முன்னேறின.
- உயர் தொழில்நுட்ப மருந்து சோதனை முறையை இலங்கைக்கு வழங்குகிறது அமெரிக்கா
- யாழில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஆதரவு வழங்குவேன் : பாடகர் ஸ்ரீநிவாஸ்
- மாணவன் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சம்பவம் : விசாரணைகள் ஆரம்பம்
- வட்டி மூலம் மட்டுமே 1000 கோடி ரூபா வருமானம்
- இஸ்ரேல் சிரியா போர் நிறுத்தம் அமெரிக்க தூதர் அறிவிப்பு
- வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு எதிராக 10 பில்லியன் கேட்டு ட்ரம்ப் வழக்கு தாக்கல்