டீசலுடன், மண்ணெண்ணெய் கலந்து பாரவூர்தி செலுத்திய சாரதி, சந்தேகத்தின் பேரில் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என லிந்துலை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி பாலித நந்தசிறி தெரிவித்தார்.
வலப்பனையிலிருந்து ஹட்டனுக்கு மணல் கொண்டு செல்லும் சில பாரவூர்திகள் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து செல்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய லிந்துலை பொலிஸார் அதிரடியாக மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பாரவூர்தி கண்டுபிடிக்கப்பட்டதாக பாலித நந்தசிறி தெரிவித்தார்.
பாரவூர்தியிலிருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் மாதிரிகள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஆய்வகத்திற்கு அனுப்பபட்டு அங்கிருந்து அறிக்கை பெறப்படும், மேலும் அந்த அறிக்கையுடன் சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று லிந்துலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். சாரதி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Trending
- கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் என்புக்கூடு மீட்பு
- தங்காலை நகர சபைக்கு கொண்டுவரப்பட்ட சடலங்கள்
- ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகனின் தேர்த்திருவிழா இன்று
- இவ்வாண்டில் மாத்திரம் 96 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : 50 பேர் உயிரிழப்பு
- 40,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல்
- யாழ். பல்கலை வேந்தராக பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்
- இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக நான்கு பெண் DIG நியமனம்
- இலங்கையர்களுக்கு இரத்த நிலவை காணும் அரிய வாய்ப்பு!