யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள விடுவிக்கப்படாத நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி இன்றைய தினம் கொழும்பு கோத்தா வீதியில் உள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில அமைதியான முறையில்; போராட்டமொன்று நடைபெற்றது.
“எமது பூர்வீக நிலத்தை மீள எம்மிடம் ஒப்படையுங்கள்” என்பதை பிரதானமாக வலியுறுத்தி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் உள்ள பாரம்பரிய நிலங்களை இலங்கை அரச படைகளிடம் இருந்து விடுவிக்க வலியுறுத்தப்பட்டது.
‘மண்ணாசை துறந்த புத்தரின் பிள்ளைகளுக்கு மாற்று இனத்தவரின் மண்ணில் ஏன் ஆசை?, எமது மக்கள் வாழ்வாதாரம் இழந்து வாட அரச படைகள் இலாபம் ஈட்டுவது முறையா? , பூர்வீக காணிகளை இழந்த மக்களாக எமது அகதி வாழ்க்கை போதும்” போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தி மக்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மன்னார் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த போராட்டத்தில், விடுவிக்கப்படாத காணிகளின் உரிமையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் பங்கேற்றனர்.
போராட்டம் நடைபெற்ற பகுதியில் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Trending
- சாவகச்சேரியில் இடித்து அகற்றப்பட்ட சுமைதாங்கி
- ஈட்டி எறிதலில் லெகாம்கேவிற்கு தங்கம்
- பருத்தித்துறை பிரதேச சபை ஏல்லைக்குள் பொலித்தீனுக்குத் தடை
- காபூலில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு
- இலங்கை வங்கியின் 75வது ஆண்டு விழா ஞாபகார்த்த நாணயத்தாள் வெளியீடு
- ஐசியுவில் இருந்து வெளியேறினார் ரணில்
- 10 நாட்களுக்கு உச்சத்தில் சூரியன்
- பொலிஸ் அதிகாரியைத் தாக்கியவர் விளக்க மறியலில்