வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகி நேற்று வெளியாகிய “மிஸிஸ் அண்ட் மிஸ்டர்” திரைப்படத்தில்,தன்னுடைய பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் “மிஸிஸ் அண்ட் மிஸ்டர்” திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இளையராஜாவின் பாடலை சோனி நிறுவத்திடம் அனுமதி பெற்றுதான் பயன்படுத்தியதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
“மிஸிஸ் அண்ட் மிஸ்டர்” படத்தில் இளையராஜா இசையில் உருவான மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தின் “ராத்திரி சிவ ராத்திரி” பாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த பாடலுக்கான உரிமையை பணம் கொடுத்து சோனி நிறுவனத்திடம் வாங்கியதாக நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.
மேலும், இளையராஜா வழக்குத் தொடர வேண்டும் என்றால், அந்த நிறுவனத்தின் மீதுதான் வழக்கு தொடரவேண்டும் என அவர் தெரிவித்தார்.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்