ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் (ஜூலை 1 முதல் 6 வரை) 36,002 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,204,046 ஆக காணப்படுகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டில், 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஓகஸ்ட் மாதத்தில் பதிவாகியிருந்தனர். இந்த ஆண்டு, முந்தைய ஆண்டை விட வேகமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவது சுற்றுலாத் துறையில் மீட்சியை பிரதிபலிக்கிறது.
ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவிலிருந்து 8,053 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்,
இதனைத் தொடர்ந்து, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,562 பேர், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,674 பேர், மற்றும் சீனாவிலிருந்து 2,362 பேர் இலங்கைக்கு வந்துள்ளனர்.
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்