உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி வரையில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு கோடி அறுபத்தைந்தாயிரத்து அறுநூற்று எண்பது பேர் வரி அடையாள எண்ணை (TIN) பெற்றுக்கொள்வதற்காக பதிவு செய்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது, நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களின் எண்ணிக்கை சுமார் 17 மில்லியன் ஆகும். 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி வரை, 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் வரி அடையாள (TIN) எண்களைப் பெற்று திணைக்களத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை முப்பத்தொரு லட்சத்து எழுபத்தொன்பதாயிரத்து முந்நூற்று எழுபத்திரண் டாக அதிகரித்துள்ளது என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் வருமான வரிக்கு பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 93,338 அதிகரித்துள்ளது