Friday, July 4, 2025 7:06 am
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, இன்று வெள்ளிக்கிழமை இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டார்.
2015 ஜனாதிபதித் தேர்தலின் போது கூட்டாளிகளுக்கு ரூ.25 மில்லியன் மதிப்புள்ள மக்காச்சோள விதைகளை விநியோகித்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பான விசாரணையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க சந்திரசேன இன்று (04) ஆணைக்குழுவில் ஆஜரானார்.

