மாலியில் உள்ள ஒரு சிமென்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் மூன்று இந்தியர்கள், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை உறுதிப்படுத்தினர்.
மேற்கு மாலியின் ஒரு பகுதியான கெய்ஸில் உள்ள டயமண்ட் சிமென்ட் தொழிற்சாலை மீது கனரக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின்னர் அவர்கள் கடத்தப்பட்டனர்
உள்ளூர் தகவல்கள், துப்பாக்கிதாரிகள் அந்த ஆலைக்குள் நுழைந்து, தாக்குதலின் போது தொழிலாளர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்ததாகக் குறிப்பிடுகின்றன.
மாலி முழுவதும் பல தாக்குதல்களை நடத்திய அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால்-முஸ்லிமின் (JNIM) இந்த கடத்தலுக்கும் பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது
பணயக்கைதிகளைப் பாதுகாக்க பமாகோவில் உள்ள இந்தியத் தூதரகம், மாலி அதிகாரிகள், உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் டயமண்ட் சிமென்ட் தொழிற்சாலை நிர்வாகத்துடன் “நெருக்கமான நிலையான தொடர்பில்” உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.